தமிழ்த்தாய் விருது

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி, இலக்கியம், கலை ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்பிற்குத் தமிழ்த்தாயின் பெயரில் விருது வழங்க 2012 ஆம் ஆண்டில் புதியதாக 3.4.2012 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்(தவ 1.2) துறை அரசாணை (நிலை) எண்.95 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விருது பெறும் சங்கத்திற்கு விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சமும் பாராட்டுக் கேடயமும், சான்றிதழும் வழங்கிச் சிறப்பக்கப்படுகிறது.

அவ்வகையில் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு 13.4.2012 அன்று சென்னை சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இவ்விருது வழங்கப்பட்டது. (9.4.2012 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் (தவ 1.2) துறை அரசாணை (நிலை) எண்.102).