உ வே சா விருது

கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும் பெரும் முயற்சியால் காணக்கிடைத்து வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வரும் அறிஞர் ஒருவருக்கு உ.வே.சா பெயரில் விருது வழங்க 2012ஆம் ஆண்டில் புதியதாக 2.4.2012 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் (தவ 1 .2 ) துறை அரசாணை (நிலை) எண்.91 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விருது பெறும் ஒருவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் அளித்துப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறது.

அவ்வகையில் புலவர் செ.இராசு அவர்களுக்கு 13.4.2012 அன்று சென்னை சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இவ்விருது வழங்கப்பட்டது. (11.4.2012 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் (தவ 1.2) துறை அரசாணை (நிலை) எண். 104).

உ வே சா விருது – விண்ணப்பப் படிவம்