கபிலர் விருது

பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரிகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும் தமிழுக்கு அணிசேர்க்கும் வகையிலும் மரபுச் செய்யுள் /கவிதைப் படைப்புகளைப் புனைந்து வழங்கும் தமிழறிஞர் ஒருவருக்குக் கபிலர் பெயரில் விருது வழங்க 2012 ஆம் ஆண்டில் புதியதாக 2.4.2012 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் (தவ1.2) துறை அரசாணை(நிலை) எண்.91 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விருது பெறும் ஒருவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் அளித்துப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறது.

அவ்வகையில் பேராசிரியர் முனைவர் அ.அ.மணவாளன் அவர்களுக்கு 13.4.2012 அன்று சென்னை சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இவ்விருது வழங்கப்பட்டது. (11.4.2012 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் (தவ 1 .2 ) துறை அரசாணை (நிலை) எண்.103 ).

கபிலர் விருது – விண்ணப்பப் படிவம்